Tuesday, March 6, 2007

வன விலங்குகள்

சிங்கம்




சிங்கம் காட்டின் ராஜா என்று அழைக்கப்படும். இதன் கர்ஜனை காட்டையே அலற செய்யும்.






புலி
நமது இந்திய நாட்டின் தேசிய விலங்கு புலி ஆகும். இதற்கு பார்வை கூர்மை அதிகம். மிக ஆபத்தான விலங்கு.





யானை


யானை மிக மிக குன்டாக இருக்கும். யானைக்கு நீளமான துதிக்கை இருக்கும். யானைக்கு கூர்மையான் இரண்டு தந்தங்கள் இருக்கும். குழந்தைகளுக்கு பிடித்தமான விலங்கு யானை.



கங்காரு

இந்த விலங்கு ஆஸ்திரேலியா நாட்டில் அதிகமாக வசிக்கிற்து. இது தம் குழந்தையை தன் வயிற்றிலே வைத்து இருக்கும். இது ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்துக்கு செல்ல குதித்து குதித்தே செல்லும்.

ஒட்டக சிவிங்கி


ஒட்டகசிவிங்கி பார்ப்பற்க்கு மிக அழகாக இருக்கும். அதற்கு மிக நீண்ட கழுத்து இருக்கும். தாவரங்களை மட்டுமே சாப்பிடும். மிக அமைதியான விலங்கு.






ஒட்டகம்

இந்த வில்ங்கு அதிகமாக பாலைவனத்திலே காணப்படும். இதற்கு மிக நீண்ட கால்கள் இருக்கும். தன் உடம்பிலே தண்ணியை தேக்கி வைத்துக் கொள்ளும், ஆதலால் நிறைய நாட்கள் தண்ணீர் இல்லாமலே இருக்கும்.

நரி

காட்டில் வாழும் விலங்குகளில் மிக அறிவுக்கூர்மையான விலங்கு நரி. தன்னுடைய புத்தியால் உணவுகளை வேட்டையாடும். நரி இரவு நேரங்களில் சத்தமாக ஊளையிடும்.


வரிக்குதிரை

குதிரை போன்று உருவில் இருந்தாலும், இதன் உடம்பில் வெள்ளை, கருப்பில் நிற்த்தில் வரி வரியாக இருக்கும். பார்க்கவே அழகாக இருக்கும். இது பிறந்த சில மணிகளிலே நன்றாக ஓடும் திற்மை கொண்டது.

முதலை
அதிகமான நேரம் தண்ணீரிலேயே இருக்கும். மிக மிக கூர்மையான பற்களை கொண்டது. தண்ணீரில் இருக்கும் போது மிக பெரிய மிருகத்தை கூட கொன்று விடும். மிக பலம் கொண்டது.



Friday, March 2, 2007

குழ்ந்தையின் ஏக்கம்


குழ்ந்தையின் ஏக்கம்

அம்மா…உண் வரவை நோக்கி நோக்கி என் கண்கள் பூத்து விட்டது
திரையில் கார்டூன் பார்த்து பார்த்து என் கண்கள் சலித்து விட்டது

வீடு சேர்ந்த நீ…என் சோர்ந்த கண்களுக்கு முத்தமிடுகிறாய்
நான் விழிக்கும் போது அந்த முத்தம் கூட கணவு என்றே தோன்றுகிறது

என் அருகில் நீ வேண்டும்…உன் பரிசம் வேண்டும்
உன் அனைப்பு வேண்டும்…உன் அன்பு வேண்டும்


நான் விழித்து இருக்கும் போது உன் முத்தம் வேண்டும்

Wednesday, February 28, 2007

மாம்பழமாம் மாம்பழம்

நல்ல நல்ல மாம்பழம்
நீண்டு பருத்த மாம்பழம்
வெல்லக் கட்டி மாம்பழம்
வாங்கித் தின்று பார்க்கலாம்.

பொன் நிறத்த மாம்பழம்
பழுத்த புதிய மாம்பழம்
சின்ன மூக்கு மாம்பழம்
சிவப்பு பச்சை மாம்பழம்

சுவை மிகுந்த மாம்பழம்
சிறுவர் விரும்பும் மாம்பழம்
குலை குலையாய் மாம்பழம்
காண வாயும் ஊறுமே.

Tuesday, February 27, 2007

ஆத்திசசூடி


ஆத்திசூடி


றம் செய்ய விரும்பு
றுவது சினம்
யல்வது கறவேல்
வது விலகேல்
டையது விளம்பேல்
க்கம்மது கைவிடேல்
ண் எழுத்து இகழேல்
ற்பது இகழ்ச்சி
யம்மிட்டு உண்
ப்புரவு ஒழுகு
துவது ஒழியேல்
வியம் பேசேல்
கம் சுருக்கேல்

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா


காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா
கொக்கே குழந்தைக்கு பால் கொண்டு வா
கிளீயே குழந்தைக்கு தேன் கொண்டு வா

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு


சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக்கிழீயே சாய்ந்தாடு
தித்தீக்கும் தேனே சாய்ந்தாடு
தேவீட்டாத தமிழே சாய்ந்தாடு

மயிலே குயிலே சாய்ந்தாடு
மாடப் புறாவே சாய்ந்தாடு

கட்டி கரும்பே சாய்ந்தாடு
காய்சீய பாலே சாய்ந்தாடு
குத்து விழக்கே சாய்ந்தாடு
குட்டி நிலவே சாய்ந்தாடு

கை வீசம்மா கை வீசு


கை வீசம்மா கை வீசு
கடைக்கு போகலாம் கை வீசு
மீட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய் தின்னலாம் கை வீசு
சொக்காய் வாங்கலாம் கை வீசு
சொகுசாய் போடலாம் வாங்கலாம் கை வீசு
கோயில்க்கு போகலாம் கை வீசு
கும்பிட்டு வரலாம் போகலாம் கை வீசு

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்
பூலோகம் எல்லாம் கொண்டாட்டமாம்
யானை மேலே ஊர்வலமாம், ஒட்டகசிவிங்கி நாட்டியமாம்
ஊர் குறுவி பின்பாட்டாம்
அற்புதமான சாப்பாடாம்
தாலி கட்டும் நேரத்துல மாப்பிளை பூனைய காணமாம்
வந்தவ்ர் எல்லாம் திட்டினராம்
வருத்தம் கொண்டு திரும்பினராம்
பக்கத்து வீட்டு பாலை தினம் திருடி அதுவும் குடித்ததாம்
திருட்டு பூனைக்கு “எண் பெண்னை திருமணம்
செய்து தரமாட்டேன்”
வந்த இந்த சம்மதம் வெட்க்க கேடு போய் வரலாம்

நிலா நிலா ஒடி வா


நிலா நிலா ஒடி வா
நில்லாமல் ஒடி வா
மலை மேலே ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா


அணிலே அணிலே வா வா


அணிலே அணிலே வா வா
அழகு அணிலே வா வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா