Wednesday, February 28, 2007

மாம்பழமாம் மாம்பழம்

நல்ல நல்ல மாம்பழம்
நீண்டு பருத்த மாம்பழம்
வெல்லக் கட்டி மாம்பழம்
வாங்கித் தின்று பார்க்கலாம்.

பொன் நிறத்த மாம்பழம்
பழுத்த புதிய மாம்பழம்
சின்ன மூக்கு மாம்பழம்
சிவப்பு பச்சை மாம்பழம்

சுவை மிகுந்த மாம்பழம்
சிறுவர் விரும்பும் மாம்பழம்
குலை குலையாய் மாம்பழம்
காண வாயும் ஊறுமே.

Tuesday, February 27, 2007

ஆத்திசசூடி


ஆத்திசூடி


றம் செய்ய விரும்பு
றுவது சினம்
யல்வது கறவேல்
வது விலகேல்
டையது விளம்பேல்
க்கம்மது கைவிடேல்
ண் எழுத்து இகழேல்
ற்பது இகழ்ச்சி
யம்மிட்டு உண்
ப்புரவு ஒழுகு
துவது ஒழியேல்
வியம் பேசேல்
கம் சுருக்கேல்

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா


காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா
கொக்கே குழந்தைக்கு பால் கொண்டு வா
கிளீயே குழந்தைக்கு தேன் கொண்டு வா

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு


சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக்கிழீயே சாய்ந்தாடு
தித்தீக்கும் தேனே சாய்ந்தாடு
தேவீட்டாத தமிழே சாய்ந்தாடு

மயிலே குயிலே சாய்ந்தாடு
மாடப் புறாவே சாய்ந்தாடு

கட்டி கரும்பே சாய்ந்தாடு
காய்சீய பாலே சாய்ந்தாடு
குத்து விழக்கே சாய்ந்தாடு
குட்டி நிலவே சாய்ந்தாடு

கை வீசம்மா கை வீசு


கை வீசம்மா கை வீசு
கடைக்கு போகலாம் கை வீசு
மீட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய் தின்னலாம் கை வீசு
சொக்காய் வாங்கலாம் கை வீசு
சொகுசாய் போடலாம் வாங்கலாம் கை வீசு
கோயில்க்கு போகலாம் கை வீசு
கும்பிட்டு வரலாம் போகலாம் கை வீசு

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்
பூலோகம் எல்லாம் கொண்டாட்டமாம்
யானை மேலே ஊர்வலமாம், ஒட்டகசிவிங்கி நாட்டியமாம்
ஊர் குறுவி பின்பாட்டாம்
அற்புதமான சாப்பாடாம்
தாலி கட்டும் நேரத்துல மாப்பிளை பூனைய காணமாம்
வந்தவ்ர் எல்லாம் திட்டினராம்
வருத்தம் கொண்டு திரும்பினராம்
பக்கத்து வீட்டு பாலை தினம் திருடி அதுவும் குடித்ததாம்
திருட்டு பூனைக்கு “எண் பெண்னை திருமணம்
செய்து தரமாட்டேன்”
வந்த இந்த சம்மதம் வெட்க்க கேடு போய் வரலாம்

நிலா நிலா ஒடி வா


நிலா நிலா ஒடி வா
நில்லாமல் ஒடி வா
மலை மேலே ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா


அணிலே அணிலே வா வா


அணிலே அணிலே வா வா
அழகு அணிலே வா வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா